/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல்
/
கும்மிடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல்
கும்மிடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல்
கும்மிடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல்
ADDED : மார் 04, 2025 01:05 AM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி,கோட்டக்கரை பகுதியில்இயங்கி வரும் அரசுபொது மருத்துவமனையில், தினசரி, 900 முதல் 1,100 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், பாம்பு கடி, மாரடைப்பு, தொழிற்சாலை மற்றும் சாலை விபத்துகளில் சிக்கு வோருக்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் அளித்து, மேல் சிகிச்சைக்காகசென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
எனவே, உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த, பல ஆண்டுகளாக அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
அதையேற்று, தமிழக தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் பாழடைந்த நிலையில் இருந்த நான்கு செவிலியர் குடியிருப்புகள், கடந்த வாரம் இடித்து அகற்றப்பட்டன.
அந்த இடத்தில், 7,500 சதுர அடி பரப்பளவில்,பல்நோக்கு மருத்துவபுறநோயாளிகள் பிரிவும், அதனுடன் 10 படுக்கை வசதியுடன் அவசர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளன.
அதற்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தி.மு.க., -- எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் பொற்ச்செல்வி தலைமையில் நடந்த விழாவில், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.