/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் ஷோரூமில் திருட்டு மேலாளர் உட்பட நால்வர் கைது
/
பைக் ஷோரூமில் திருட்டு மேலாளர் உட்பட நால்வர் கைது
ADDED : மே 10, 2024 09:06 PM
மதுரவாயல்:சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி,40; மதுரவாயல் பகுதியில் 'பைக் ஷோரூம்' நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன் ஷோரூமில் பணியாற்றும் மேலாளர் மணிகண்டன்,35, உட்பட நான்கு பேர், கணினியை முடக்கி, உதிரி பாகங்களை திருடி, அதை விற்று 6 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று மணிகண்டன், ஊழியர்கள் உதயா, 21, கமல், 25, ஷாநவாஸ், 29, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் இரு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.