/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் கொலையில் நான்கு பேர் கைது
/
வாலிபர் கொலையில் நான்கு பேர் கைது
ADDED : செப் 13, 2024 09:47 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மணி மகன் அஜய், 22. வெல்டர். நேற்று முன்தினம் பில்லாக்குப்பம் கிராமத்தில் உள்ள தைலந்தோப்பு அருகே உள்ள மைதானத்தில், கழுத்து, பின் தலை மற்றும் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் சம்பவ இடத்தில் முதல் நாள் இரவு, அஜய் மது அருந்தியது தெரிந்தது. இதையடுத்து அஜயின் நண்பர்களான பில்லாக்குப்பம் தேவராஜ், 18, தனுஷ், 18, பொன்னேரி அடுத்த கோளூரை சேர்ந்த பசுபதி, 20 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரிடம் சிப்காட் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஜயை வரவழைத்து மது போதை ஏற்றி, நான்கு பேரும் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரை சிப்காட் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.