/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிணற்று வேலியை அகற்ற நரிக்குறவர்கள் போலீசில் புகார்
/
கிணற்று வேலியை அகற்ற நரிக்குறவர்கள் போலீசில் புகார்
கிணற்று வேலியை அகற்ற நரிக்குறவர்கள் போலீசில் புகார்
கிணற்று வேலியை அகற்ற நரிக்குறவர்கள் போலீசில் புகார்
ADDED : ஆக 17, 2024 07:37 PM
சோழவரம்:சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு ஊராட்சியில், 100க்கும் அதிகமான நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள், சோழவரம் காவல் நிலையத்தில் தாங்கள் பயன்படுத்தும் கிணறு உள்ள பகுதியை தனிநபர் வேலிபோட்டு வைத்து உள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் எனக்கூறி புகார் அளித்தனர்.
புகாரில் உள்ளதாவது:
எங்களுக்கு 1971ல், தமிழக அரசால், பூமி தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதில் உள்ள தண்ணீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் தனிநபர் ஒருவர், கிணறை சுற்றி திடீரென வேலி அமைத்து உள்ளார். இதனால் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம். மாவட்ட நிர்வாகத்திடமும், பொன்னேரி வருவாய்த்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீர் பயன்பாட்டில் உள்ள கிணறை சுற்றி போடப்பட்டு உள்ள முள்வேலியை அகற்றி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

