ADDED : ஆக 02, 2024 01:50 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரில் அமைந்துள்ள கே.இ.என்.சி. நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இங்கு பிளஸ் 1 வகுப்பு பயிலும் 137 மாணவர், 171 மாணவியர் என மொத்தம் 308 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், தலைமையில் கைத்தறி மற்றும் துணிநுால் அமைச்சர் காந்தி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்.
இதேபோல் கே.இ.என்.சி., நடேசன் செட்டியார் அரசு பள்ளியில் 7 மற்றும் 8 ம் வகுப்பு படித்து வரும் 132 மாணவர், 34 மாணவியர் ஆக மொத்தம் 166 மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் துவக்க விழாவும் நடந்தது.
விழாவில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட கல்வி அதிகாரி சுகானந்தம் பள்ளி துணை ஆய்வாளர்கள் சவுத்ரி, பிரேம்குமார், பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.