/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இலவச கபடி பயிற்சி வரும் 10ல் துவக்கம்
/
இலவச கபடி பயிற்சி வரும் 10ல் துவக்கம்
ADDED : ஜூன் 08, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமெட் பல்கலை, எஸ்.ஆர்.எம்., மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், கோடைக்கால இலவச பயிற்சி முகாம், வரும் 10ம் தேதி நடக்கிறது.
கோவளத்தில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது. பள்ளி மாணவ - மாணவியருக்கான கபடி மற்றும் வாலிபால் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முகாமின் முடிவில், அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர், அமெட் பல்கலையின் உடற்கல்வித் துறையை 70945 18326 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.