/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அருள்ஜோதி பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
/
அருள்ஜோதி பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 09, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும், அருள்ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சென்னை, ரெட்டேரி குமரன் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்த முகாமில், பள்ளி செயலர் ராஜலட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பொது மருத்துவம், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பல் மருத்துவம் அதற்கான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த, 120க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.