/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா கலெக்டர் ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா கலெக்டர் ஆலோசனை
ADDED : செப் 04, 2024 02:20 AM
திருவள்ளூர்:விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து காவல் துறையினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 7ல் நடக்கிறது. இதற்காக, ஹிந்து அமைப்பினரும், பொதுமக்களும், தங்கள் பகுதிகளில் விநாயகர் சிலை அமைத்து வழிபட ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், எஸ்.பி., சீனிவாசபெருமாள் மற்றும் அனைத்து அலுவலர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
பின் கலெக்டர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 7ல், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.
அன்றைய தினம், சட்டம்- - ஒழுங்கு தொடர்பாகவும், பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணி; விநாயகர் சிலை நிறுவுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ள, 15 இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.