/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
/
பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 15, 2024 11:31 PM

பழவேற்காடு: பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த, 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
பல்வேறு கிராமங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த ஒரு வாரமாக பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
சிலை கரைக்க கடைசி நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர், லாரிகளில் விநாயகர் சிலைகள் பழவேற்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
பழவேற்காடு லைட்அவுஸ்குப்பம் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தன்னார்வ குழுவினர், விநாயகர் சிலைகளை துாக்கி சென்று கடலில் கரைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
பொன்னேரி தீயணைப்புத்துறையினர் லைப் ஜாக்கெட், டியூப் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
நீச்சல் தெரிந்த மீனவர்கள், பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படை போலீசார் விநாயகர் சிலை கரைப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் ஒலிபெருக்கி உதவியுடன், சிலைகளை கொண்டு வருபவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியபடியும், கடலில் குளிக்க முயன்றவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றியபடியும் இருந்தனர். விநாயகர் சிலைகளை கொண்டு வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.