ADDED : ஜூலை 05, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி, பயணியர் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகன், 26, என்பவரிடம், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.