/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானிய விலையில் தக்கைபூண்டு விதைகள்
/
மானிய விலையில் தக்கைபூண்டு விதைகள்
ADDED : மார் 06, 2025 02:38 AM
திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தக்கைபூண்டு பயிரிடுவதால், உரச் செலவு குறையும். மேலும், நுண்ணுயிர் பெருக்கவும், மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு மானிய விலையில்தக்கைபூண்டு விதைகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, திருத்தணி வேளாண் - பொறுப்பு உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:
'மண்னுயிர் காத்து, மண் உயிர் காப்போம்' என்ற திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு, 1 ஏக்கர்பரப்பில் பயிரிடுவதற்கான தக்கைபூண்டு விதைகள், 20 கிலோ வழங்கப்படுகிறது. இதன் விலை கிலோ, 99 ரூபாய். விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
இந்த விதைகள் பெறுவதற்கு, நிலத்தின் கணினி சிட்டா, ஆதார் கார்டுடன் திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் சென்று வாங்கி கொள்ளலாம். தற்போது, 3,000 கிலோ விதைகள் மட்டுமே இருப்பு உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.