/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அரசு ஏற்பாடு
/
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அரசு ஏற்பாடு
ADDED : மே 09, 2024 01:14 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியர் விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் ஆகியவை நடப்பு 2024 - 25ம் ஆண்டு ஏற்படுத்தியுள்ளன.
இதில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 மாணவர்கள் வரை தடகளம், குத்துச்சண்டை, பளூ துாக்குதல், மல்யுத்தம், கிரிக்கெட், வாலிபால், மேசை பந்து உட்பட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பின், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பர். எனவே விருப்பமுள்ள மாணவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, மாவட்ட விளையாட்டு துறையினர் தெரிவித்தனர்.