/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் எதிரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாஜி, லோகைய்யா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் பங்கேற்று, அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வில் பழைய நிலையிலேயே ஒன்றிய முன்னுரிமை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.