/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
70 ஆண்டாக சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி தடம் மாறும் மாணவர்களால் பெற்றோர் அச்சம்
/
70 ஆண்டாக சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி தடம் மாறும் மாணவர்களால் பெற்றோர் அச்சம்
70 ஆண்டாக சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி தடம் மாறும் மாணவர்களால் பெற்றோர் அச்சம்
70 ஆண்டாக சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி தடம் மாறும் மாணவர்களால் பெற்றோர் அச்சம்
ADDED : ஜூன் 27, 2024 01:09 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி 1951ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக துவங்கி, 1980ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளி துவங்கப்பட்ட ஆண்டு முதல், தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.
தற்போது பள்ளியின் நுழைவு பகுதியில், 400 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதை 2002ம் ஆண்டு தலைமையாசிரியராக இருந்தவர் நன்கொடையாக பெற்று கட்டியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசிடம் 70 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் தனிநபர்கள் நடமாட்டம் உள்ளதுடன்,சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் மது அருந்துவதும், கட்டடத்தை சேதப்படுத்துவதும் தொடர்கிறது.
மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களுக்கு இவ்வழியாக குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வினியோகிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி கட்டடத்திற்கு பின்புறம் வரும் காதல் ரோமியோக்கள், மாணவியருக்கு தொல்லை தருகின்றனர். மாணவியர் கழிப்பறைக்கு செல்லும் பகுதியில், சிலர் பாலியல் ரீதியாக தொல்லை தருகின்றனர்.
எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சுற்றுச்சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.