/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்
/
அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 25, 2024 11:55 PM

திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் மண்டல சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் மாயக்கண்ணன் தலைமை வகித்தார்.போராட்டத்தில் ஊதியப் பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலா ளர்களின் பணபலன், போக்குவரத்து படி, மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணவேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்புவதில் ஒப்பந்த முறை கைவிட்டு வாரிசு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் திருவள்ளூர், கோயம்பேடு, திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.