/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்தவெளி கழிப்பறையான அரசு பள்ளி வளாகம் மாணவர்களுக்கு தொற்று நோய் அபாயம்

ADDED : ஆக 01, 2024 12:41 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் கே.ஈ.என்.சி. நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், மாணவர்கள் பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு அருகே உள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் குழாயை சுற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், மாணவர்கள் விளையாட முடியாமல், ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.
அதேபோல், பள்ளி வளாகத்தில் கட்டட கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால், மாணவர்கள் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.