/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சானுார் மல்லாவரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
/
சானுார் மல்லாவரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
சானுார் மல்லாவரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
சானுார் மல்லாவரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
ADDED : ஜூன் 11, 2024 05:17 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சானுார் மல்லாவரம் கிராமத்தின் ஏரிக்கரை அருகே, அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, 250 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சானுார் மல்லாவரம், சின்னசானுார், நீலோத்பாலாபுரம், முள்ளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
கிராமத்தின் தெற்கில் செயல்பட்டு வந்த நடுநிலை பள்ளி தரம் உயர்த்தப்பட்டு,
உயர்நிலை பள்ளியாக இந்த புதிய வளாகத்திற்கு இடம் மாற்றப்பட்டது. பழைய பள்ளி வளாகம், தொடக்க பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இந்த புதிய வளாகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், பள்ளியை ஒட்டி ஏரி அமைந்துள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.