/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 17, 2024 05:55 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில், 252 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 70, சமூக பாதுகாப்புதிட்டம் 42, வேலைவாய்ப்பு கோரி 25, பசுமை வீடு, அடிப்படை வசதி 53, இதரதுறை 62 என மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.
தாட்கோ திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், ஆர்.டி.ஓ., கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.