/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது
/
ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது
ADDED : ஜூன் 14, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியே, தமிழகத்திற்கு குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்கோட்டை போலீசார் தமிழக - ஆந்திர எல்லையான அண்ணாநகர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இதில் அவ்வழியே வந்த அரசு பேருந்தை சோதனை செய்ததில், அதில் பயணம் செய்த ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த மாயவேணு, 61 என்பவரிடம் 9 கிலோ ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.