/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வங்கனுார் கோவிலில் உற்சவர் சிலைகள் ஒப்படைப்பு
/
வங்கனுார் கோவிலில் உற்சவர் சிலைகள் ஒப்படைப்பு
ADDED : செப் 07, 2024 07:31 AM

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில் அமைந்துள்ளது அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில். இந்த கோவிலில் அஷ்டலட்சுமியருக்கு தனி தனியே சன்னிதி உள்ளது.
அதே போல் சக்கரதாழ்வார் சன்னிதியும் உள்ளது. இந்த கோவிலின் உற்சவர் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். பாதுகாப்பு மையத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். தற்போது வங்கனுார் அஷ்டலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சிசிடிவி கேமராவுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உற்சவர் சிலைகளுக்கான தனி அறையும் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, உற்சவர் சிலைகளை மீண்டும் கோவிலுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அறநிலைய துறை அதிகாரிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, உற்சவர் சிலைகளை நேற்று மீண்டும் கோவிலுக்கு வழங்கினர்.
வேதவிற்ப்பன்னர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, சுவாமி சிலைகளை வரவேற்றனர்.