/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீவிலாசபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சுகாதார கேடு
/
ஸ்ரீவிலாசபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சுகாதார கேடு
ADDED : மே 16, 2024 12:40 AM

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீவிலாசபுரம் திரவுபதியம்மன் கோவில் அருகே, வி.ஏ.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு, கிராமத்தினர் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், வி.ஏ.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வீணாக வெளியேறும் குடிநீர், கழிவுநீராக, வி.ஏ.ஓ., அலுவலகத்தை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார கேடு நிலவுகிறது.ஆர்.கே.பேட்டை வட்டார மருத்துவ நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சுற்றிலும் கழிவுநீர் தொடர்ந்து தேங்குவதால், கட்டடமும் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்களும் உருக்குலைந்து கிடக்கின்றன. மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குடிநீரை முறையாக தடுத்து நிறுத்தி ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.