/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திராவில் பலத்த மழை நிரம்பியது சிட்ரபாக்கம் அணைக்கட்டு
/
ஆந்திராவில் பலத்த மழை நிரம்பியது சிட்ரபாக்கம் அணைக்கட்டு
ஆந்திராவில் பலத்த மழை நிரம்பியது சிட்ரபாக்கம் அணைக்கட்டு
ஆந்திராவில் பலத்த மழை நிரம்பியது சிட்ரபாக்கம் அணைக்கட்டு
ADDED : ஆக 21, 2024 09:04 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியே, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது. இங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், கல்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியே பாய்ந்து, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது.
இதில் ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் அணைக்கட்டு 1989ம் ஆண்டு கட்டப்பட்டது. பருவ மழை காலத்தில் நிரம்பி வழியும். இந்த அணைக்கட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுற்றியுள்ள மூன்று கி.மீட்டர் துாரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர், விவசாயத்திற்கு போதுமான அளவு நீர் கிடைக்கிறது. இந்த நீர்த்தேக்கம் சில மாதங்களாக வறண்ட நிலையில் காணப்பட்டது.
சில தினங்களாக ஆந்திர மாநிலம், நந்தனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மலைப்பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், நந்தனம் ஓடை வழியே ஆரணி ஆற்றில் கலந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நீர் சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, தமிழகத்தை நோக்கி வந்தது. இதன் காரணமாக சிட்ரபாக்கம் அணைக்கட்டில் தண்ணீர் நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.