நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் வெள்ளை சரவணன், 33; ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல், கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து, போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்தார்.
இந்த நிலையில், அம்பத்துார் அடுத்த மாதனாங்குப்பம் பகுதியில், நண்பரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குறிப்பிட்ட வீட்டை நேற்று முன்தினம் நள்ளிரவு சுற்றிவளைத்த புழல் போலீசார், நேற்று அதிகாலை அவரை கைது செய்தனர்.