ADDED : ஜூலை 03, 2024 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட செயலர் தமிழரசு தலைமை வகித்தார்.
இதில், அனைத்து பழங்குடி மக்களுக்கும் இனச்சான்று வழங்க வேண்டும். வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகள், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.