/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருத்தணி கோவிலில் தரிசனம்
/
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருத்தணி கோவிலில் தரிசனம்
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருத்தணி கோவிலில் தரிசனம்
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருத்தணி கோவிலில் தரிசனம்
ADDED : ஜூன் 01, 2024 06:24 AM

திருத்தணி: சிங்கப்பூர் உள்துறை அமைச்சரும், தமிழ் கலாச்சாரத்தின் தலைவருமான சண்முகம் நேற்று காலை தன் குடும்ப உறுப்பினர்கள் நால்வருடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார். அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை கோவில் அறங்காவலர்கள் மோகனன், நாகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஆபத்சகாய விநாயகர், உற்சவர் சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் ஆகிய சன்னிதிகளில் அமைச்சர் சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் உற்சவர் படம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வந்ததை தொடர்ந்து பத்திரிகை மற்றும் தொலைகாட்சி நிருபர்கள் மலைக்கோவிலுக்கு சென்று படம் பிடிக்க முயன்றனர். வீடியோ, புகைப்படம் எடுப்பதற்கு அமைச்சருடன் வந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.