/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஹோட்டல் மேலாண்மை பயிற்சி
/
ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஹோட்டல் மேலாண்மை பயிற்சி
ADDED : மார் 14, 2025 10:59 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக, ஆதிதிராவிட மாணவ - மாணவியருக்கு ஹோட்டல் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'தாட்கோ' சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தோருக்கு பி.எஸ்சி., ஹோட்டல் மேலாண்மை, ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு டிப்ளமா மற்றும் 10ம் வகுப்பு முடித்தோருக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னை தரமணியிலுள்ள தனியார் நிறுவனம் வாயிலாக கற்பிக்கப்பட உள்ளது. இங்கு படித்தோர், உலகளவில் சிறந்த ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவன பயிற்சியில் சேர, 10 மற்றும் பிளஸ் 2வில் தேர்ச்சி, குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மேலும், இந்த பயிற்சிக்கான முழு செலவும் தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர விரும்புவோர், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.