ADDED : மார் 22, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி நடப்பதையொட்டி நேற்று மாலை தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி., நரேந்திர நாயர், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., பொன்னி, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

