/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாபிராமபுரத்தில் கழிவுநீர் காய்ச்சலால் பகுதியினர் அவதி
/
பட்டாபிராமபுரத்தில் கழிவுநீர் காய்ச்சலால் பகுதியினர் அவதி
பட்டாபிராமபுரத்தில் கழிவுநீர் காய்ச்சலால் பகுதியினர் அவதி
பட்டாபிராமபுரத்தில் கழிவுநீர் காய்ச்சலால் பகுதியினர் அவதி
ADDED : ஜூலை 03, 2024 12:43 AM

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திரவுபதியம்மன் கோவில், பஜனை கோவில், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் பள்ளிக்கூடம் மற்றும் திரவுபதியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் ஊராட்சி நிர்வாகம் அமைத்தும், கழிவுநீர் வெளியே செல்வதற்கு வசதி ஏற்படுத்தாததால், கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளன.
இதனால் அதிகளவில் கொசுக்கள் உருவாகியுள்ளன. இந்த கொசுக்கள் கடிப்பதால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, பள்ளிக்கூட தெருவில், 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.