/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காது சிகிச்சை பிரிவு துவக்கம்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காது சிகிச்சை பிரிவு துவக்கம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காது சிகிச்சை பிரிவு துவக்கம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காது சிகிச்சை பிரிவு துவக்கம்
ADDED : ஆக 31, 2024 10:57 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை உள்ளோருக்கு, காது கேளாமை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 206வது அறையில், காது கேளாமை சிகிச்சைக்கான 'சவுண்ட் புரூப்' அறையை , மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் மருத்துவர் ரேவதி துவக்கி வைத்தார்.
இங்கு, மருத்துவர் பரிமளா தலைமையிலான, நான்கு மருத்துவர்கள் தினமும் காது கேளாமை குறித்து சிகிச்சை அளித்து, தேவையானவர்களுக்கு இலவச காது கேட்கும் கருவி, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய பொறுப்பாளர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:
பிறந்த குழந்தைகளுக்கு இலவசமாக காது கேட்கிறதா என்பது குறித்து, பரிசோதனை செய்து, தேவையானோருக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறுவை சிகிச்சை இலவமாக வழங்கப்படுகிறது.
மேலும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், இலவசமாக கண் சிகிச்சை பரிசோதனை நடக்கிறது. தற்போது, புதிதாக, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும், புதிய சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, பிறந்த குழந்தை முதல் வயதானோருக்கும், காது சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.