/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுதந்திர தின விழா ஆலோசனை கூட்டம்
/
சுதந்திர தின விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 09, 2024 12:49 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர தின விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, அரசு துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசனை நடத்தினார்.
இதில், விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர, திருவள்ளுர் நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ - மாணவியருக்கு சிற்றுண்டிகள் வழங்க வேண்டும்.
விழா நாளில் உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் இருக்கும் வகையில், சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.