/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுவட்ட அளவிலான போட்டி திருத்தணியில் துவக்கம்
/
குறுவட்ட அளவிலான போட்டி திருத்தணியில் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 07:29 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 14 வயது முதல் 17 வயதுள்ள மாணவர்கள் இடையே கபடி, ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல்வேறு போட்டிகள் நேற்று துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளின் துவக்க விழா, நேற்று முன்தினம் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
இதில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், கேரம் போட்டியை துவக்கி வைத்து பேசியதாவது:
பள்ளி மாணவர்கள் இடையே உள்ள பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த, இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அனைத்து மாணவர்களும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நாள் போட்டியில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.