/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா துவக்கம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா துவக்கம்
ADDED : மே 03, 2024 01:24 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா விமர்ச்சையாக நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடப்பாண்டிற்கான தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேல்திருத்தணி பகுதி முழுதும் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
மேலும் தீமிதி விழா ஒட்டி, 19ம் தேதி வரை தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறும். 9ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 11ம் தேதி சுபத்திரை கல்யாணம், 14 ம் தேதி அர்ஜுனன் தபசு மற்றும் 19ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது.
மே 20ம் தேதி தர்மர் பட்டாபிேஷகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.