/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவில் மலைப்பாதையில் ‛டோல்கேட்' அமைக்கும் பணி தீவிரம்
/
திருத்தணி கோவில் மலைப்பாதையில் ‛டோல்கேட்' அமைக்கும் பணி தீவிரம்
திருத்தணி கோவில் மலைப்பாதையில் ‛டோல்கேட்' அமைக்கும் பணி தீவிரம்
திருத்தணி கோவில் மலைப்பாதையில் ‛டோல்கேட்' அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 08, 2024 12:46 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன், லாரி மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் திருத்தணி—அரக்கோணம் மாநில நெடுஞ் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் மலைப்பாதை நுழை வாயிலேயே டோல்கேட் கோவில் நிர்வாகம் அமைத்துள்ளன. இந்த கேட்டில் வாகன ஓட்டிகள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு கட்டண ரசீது வாங்குவதற்கு நிற்பதால், வாகனங்கள் அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வரை வரிசையாக நிற்கிறது. இதனால் நெரிசல் மற்றும் விபத்துக்கள் நடக்கிறது.
இதை தடுக்கும் வகையில் கோவில் நிர்வாகம் டோல்கேட், மலைப்பாதையின் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு நிழற்குடை மற்றும் கட்டணம் வசூலிப்பதற்கு கவுண்டர் ஆகியவை, 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தற்போது பணிகள் துரித வேகத்தில் நடப்பதால் ஓரிரு நாளில் நிழற்குடை அமைத்து டோல்கேட் மாற்றப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளன.