/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி
ADDED : ஜூன் 13, 2024 12:23 AM
திருவூர்:திருவள்ளூர் அடுத்த திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை வேளாண்மை குறித்து ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
திருவூர் வேளாண் அறிவியல் நிலைய பயிர் வினையியல் இணை பேராசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்புரை வழங்க, பொறுப்பு திட்ட ஒருங்கிணப்பாளர் அகிலா முகாமை துவக்கி வைத்தார்.
பின், தொழில்நுட்ப பயிற்சி பேராசிரியர் சிவகாமி, இயற்கை வேளாண்மை மற்றும் மண்வளம் பேணிக்காப்பது மற்றும் ஊட்டச்சத்து, இயற்கை வேளாண்மையின் கோட்பாடுகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பூச்சியியல் உதவி பேராசிரியர் விஜயசாந்தி பேசினார். தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பேராசிரியர் பிரீத்தி பேசினார்.
இதில், திருவூர், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், வில்லிவாக்கம், திருவாலங்காடு, எல்லாபுரம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த மகளிர் சமுதாய களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பயனாளிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.