/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் சாலையில் மீண்டும் கார் சாகசம் 'ரேஸ்' நடத்தியவர்கள் குறித்து விசாரணை
/
மீஞ்சூர் சாலையில் மீண்டும் கார் சாகசம் 'ரேஸ்' நடத்தியவர்கள் குறித்து விசாரணை
மீஞ்சூர் சாலையில் மீண்டும் கார் சாகசம் 'ரேஸ்' நடத்தியவர்கள் குறித்து விசாரணை
மீஞ்சூர் சாலையில் மீண்டும் கார் சாகசம் 'ரேஸ்' நடத்தியவர்கள் குறித்து விசாரணை
ADDED : ஆக 06, 2024 02:28 AM

சோழவரம்:மீஞ்சூர் - வண்டலுார் இடையே, 62 கி.மீ., தொலைவிற்கு, 400 அடி வெளிவட்ட சாலையில் கனரக வாகனங்களே அதிகளவில் பயணிக்கின்றன. விடுமுறை நாட்களில், இந்த சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும்.
இதை பயன்படுத்தி, பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் இங்கு வந்து குவிகின்றனர். அதிக வேகமாக பயணிப்பது, 'வீலிங்' செய்வது, ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில், போட்டி போடுவது என பைக் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம், 15ம் தேதி இரவு, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள அருமந்தை பகுதியில், இளைஞர்கள் சிலர் பைக், ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டபோது, விபத்து ஏற்பட்டது.
இதில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மூன்று பேர், பலத்த காயம் அடைந்தனர்.
செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, ஏழுபேரை கைது செய்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட சாலையில், மீண்டும் பைக், கார் பந்தயங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது.
இரு தினங்களுக்கு முன், தி.மு.க., கட்சி கொடிகளுடன் ஐந்து சொகுசு கார்கள், மேற்கண்ட சாலையில் உள்ள கும்மனுார் பகுதியில் வேகமாக பயணிப்பது, புழுதி பறக்க வட்டமடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
அதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார், மேற்கண்ட வாகனங்ளின் பதிவு எண்களை வைத்து, நான்கு பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.