/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 11, 2024 10:14 PM
திருவள்ளூர்:தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களுக்கு, அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் ஆர்வலருக்கு, “தமிழ்ச்செம்மல் விருது”வழங்கப்படுகிறது. 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2024ம் ஆண்டிற்கான 'தமிழ்ச்செம்மல்' விருதுக்கான விண்ணப்பத்தை , தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஆக.12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.