/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடகரை ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர அழைப்பு
/
வடகரை ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர அழைப்பு
ADDED : மே 23, 2024 11:43 PM
திருவள்ளூர், வடகரை ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் சேர, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்கல்வி பெறுவதற்காக www.skilltraining.tn.gov,in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ஜூன் 7ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் பொருத்துனர், மின்சார பணியாளர், கம்மியர் மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில், 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரங்கள் கடைசி தேதிக்கு பின், இதே இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சி கட்டணம் இல்லை.
பயிற்சியில் சேரும் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் 750 ரூபாய் வழங்கப்படும். மேலும், உணவுடன் கூடிய தங்கும் விடுதி, புத்தகங்கள், சீருடை, காலணி, இலவச பேருந்து பயண அட்டை மற்றும் அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
விரிவான விபரங்களுக்கு www.skilltraining.tn.gov,in என்ற இணையதளம் மற்றும் 044- - 2955 5659, 044- - 2989 6032 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.