/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்காணிப்பு கேமரா இயங்குகிறதா? உறுதி செய்ய கலெக்டர் உத்தரவு
/
கண்காணிப்பு கேமரா இயங்குகிறதா? உறுதி செய்ய கலெக்டர் உத்தரவு
கண்காணிப்பு கேமரா இயங்குகிறதா? உறுதி செய்ய கலெக்டர் உத்தரவு
கண்காணிப்பு கேமரா இயங்குகிறதா? உறுதி செய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 12, 2024 01:55 AM
திருவள்ளூர்:காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, காவல் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.
போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வு மற்றும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், டி.ஆர்.ஓ., ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால், கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக பயன்பாட்டில் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்களிடம் இருந்து புகார் தெரிவித்தால், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அந்த புகார் மனு மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், ஆர்.டி.ஓ.,க்கள் கற்பகம், தீபா, கலெக்டர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.