/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டன் சூதாட்டம் வாலிபருக்கு சிறை
/
காட்டன் சூதாட்டம் வாலிபருக்கு சிறை
ADDED : ஆக 02, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,:திருவள்ளூர் பகுதியில் மசூதி அருகே நகர காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.
விசாரணையில் அவர் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த அசாருதீன், 23 என்பதும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அசாருதீனிடமிருந்து 6 ,920 ரூபாய், இரண்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் அசாருதீனை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.