ADDED : மார் 14, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், குரூப் - 4 தேர்வில் வெற்றி, 20 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குரூப் - 4 தேர்வில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி- - 4ன் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வளர்ச்சி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.