/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
/
பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
ADDED : மார் 05, 2025 08:04 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பஜார் பகுதியில் அதிகளவு மளிகை, ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வைத்தும் சிற்றுண்டி விற்கப்படுகிறது. பாஸ்ட் புட் கடைகளும் அதிகளவில் உள்ளன.
இதில் பெரும்பாலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, இட்லி, தோசை, பாஸ்ட் புட் உணவு ஆகியவற்றை மெல்லிய பிளாஸ்டிக் கவரில் வைத்து பார்சல் செய்யப்படுகிறது.
இதனால், சூடான உணவு பொருளில் பிளாஸ்டிக் கலந்து, உடலுக்கு உபாதை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும், பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.