/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காரனோடையில் முந்திரி பழம் விற்பனை கனஜோர்
/
காரனோடையில் முந்திரி பழம் விற்பனை கனஜோர்
ADDED : மே 23, 2024 11:46 PM

சோழவரம், சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில், முந்திரி பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அருகில் உள்ள தேவனேரி, ஆத்துார், அட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான முந்திரி காடுகள் உள்ளன. அங்கிருந்து முந்திரி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், முந்திரி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். முந்திரி பழம் சுவையாக இருப்பதுடன், அதில் அதிக சத்துக்கள் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
முந்திரி பழம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையுடன் இருக்கும். வறட்சியான பகுதியிலும் விளையும் பழம். பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை அறிந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.