/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சந்திர பிரபை வாகனத்தில் கரியமாணிக்க பெருமாள்
/
சந்திர பிரபை வாகனத்தில் கரியமாணிக்க பெருமாள்
ADDED : மே 23, 2024 11:45 PM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது, கமலவல்லி சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் வார்ஷிக பிரம்மோற்சவ விழா, 19ம் தேதி துவங்கியது.
தினமும் காலை 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் 6:30 மணிக்கு உற்சவர் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முதல் நாளில் இருந்து யாளி, சேஷ, சந்திர பிரபை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம், இன்று நடைபெற உள்ளது.
வரும் 26ம் தேதி திருத்தேர் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்வர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.