/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டூர் சாலை மோசம்: மழையால் உருவான புது குளம்
/
காட்டூர் சாலை மோசம்: மழையால் உருவான புது குளம்
ADDED : ஜூன் 27, 2024 01:05 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மகன்காளிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது, காட்டூர் கிராமம். இந்த கிராமம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லையோரத்தில் உள்ள மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
மலைச்சரிவில் அமைந்துள்ளதால், மழைநீர் தேங்காமல் எளிதாக வடிந்து விடும். ஆனால், இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி எதிரே உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழைநீர், குளம் போல் சாலையில் தேங்கி நிற்கிறது.
தார்ச்சாலை என்பதால், ஒரு நாள் மழை பெய்தாலும், வார கணக்கில் மழைநீர் தேங்குகிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினரும், மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார துறையினரும், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் என்பதால், அதிகாரிகளின் கவனத்திற்கு வருவதில்லை என, பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.