/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற கவரைப்பேட்டை ராஜா தெரு
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற கவரைப்பேட்டை ராஜா தெரு
ADDED : மே 28, 2024 04:59 PM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில் உள்ள முக்கிய தெருக்களில் முதன்மையான தெருவாக கருதப்படுவது ராஜா தெரு. அதன் சாலை வழியாக கவரைப்பேட்டை ரயில் நிலையம், அருள் நகர், தியாகராய தெரு, சண்முகா நகர் செல்ல வேண்டும். தினசரி ஆயிரக்கணக்கானோர், ராஜா தெரு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள அந்த சாலை, 2019ம் ஆண்டு தார் சாலையாக புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது அந்த தார் சாலை முற்றிலும் தேசமடைந்தது. தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
அந்த சாலையை கடந்து செல்லும் குடியிருப்புவாசிகளும், ரயில் பயணியரும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி, கவரைப்பேட்டை ராஜா தெருவை கான்கிரீட் சாலையாக புதுப்பிக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.