/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் நோட்டு, புத்தகம் வழங்கல்
/
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் நோட்டு, புத்தகம் வழங்கல்
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் நோட்டு, புத்தகம் வழங்கல்
கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் நோட்டு, புத்தகம் வழங்கல்
ADDED : ஜூன் 12, 2024 02:24 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி. கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன. அதே போல் நேற்று ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில், 10,000 ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு, கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், டென்னிஸ் பேட் மற்றும் பந்து பல்வேறு விளையாட்டுப் பொருட்களை அறக்கட்டளை தலைவர் சாய்ஸ்ரீனிவாசன் செயலர் பாலாஜி ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் முன்னிலையில் வழங்கினர்.
திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி இருளர் காலனியில் அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 30 மாணவ- - மாணவியருக்கு திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சீருடை, நோட்டு புத்தகங்களை திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சிறப்பு எஸ்.ஐ., பிரகாஷ் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பங்கேற்றனர்.