/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9 ஆண்டுகளாக நிரம்பாத கொண்டாபுரம் ஏரி
/
9 ஆண்டுகளாக நிரம்பாத கொண்டாபுரம் ஏரி
ADDED : ஜூலை 17, 2024 12:29 AM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி மற்றும் கொண்டாபுரம் இடையே ஏரி அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணாபுரம், மடுகூர் பகுதியில் உள்ள மலையில் இருந்து இந்த ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. ஆனால், ஏரி நிரம்ப இது போதுமானதாக இல்லை.
கடந்த 2015க்கு பின், இந்த ஏரி நிரம்பவில்லை. அதே நேரத்தில், இந்த ஏரியில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யனேரி ஏரி, ஆண்டுதோறும் நிரம்பி வழிகிறது.
அய்யனேரி ஏரிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஏரியின் உபரிநீர் வாயிலாக நீர்வரத்து அமைகிறது. அய்யனேரி ஏரியில் இருந்து கொண்டாபுரம் கிராமத்தின் வடக்கில் வெளியேறும் உபரிநீர், ஞானகொல்லிதோப்பு ஓடை வழியாக பாய்ந்து கொசஸ்தலையில் கலக்கிறது.
அம்மனேரி, கொண்டாபுரம் இடையே அமைந்துள்ள ஏரி கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிரம்பாமல் குட்டையாக வறண்டு கிடக்கிறது.
இதில், கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அம்மனேரி மற்றும் கொண்டாபுரம் பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அய்யனேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை, இந்த ஏரிக்கு திருப்பிவிட பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துஉள்ளனர்.