ADDED : மே 10, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்,
பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஜெ.என்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தமிழரசி.
பிளஸ் 2 அரசு பொது தேர்வில், 600க்கும், 595 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
வணிகவியல், பொருளாதாரம், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தில், 100 மதிப்பெண்கள் பெற்றார்.
மாணவிக்கு கன்னிகைப்பேர் ஊராட்சி மன்றம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் காயத்ரி மற்றும் மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாணவிக்கு பதக்கம் வழங்கப்பட்டது.