/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 06, 2024 10:10 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில்,1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் சிதிலம் அடைந்து இருந்தது.
கடந்த, 2016ல், கிராமவாசிகள் தங்களது சொந்த செலவில் கோவிலைபுனரமைக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை துவங்கினர். கடந்த, எட்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவிலின் உள்பிரகாரம், துாண்கள், மேற்கூரை ஆகியவை அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன.
சண்டிகேஸ்வரர், நம்மாழ்வார்கள், சூரியன், சந்திரன், விநாயகர், வள்ளி தெய்வானை முருகர், காலபைரவர், நவக்கிரகம், பிரதோஷ நந்தி ஆகியவை தனித்தனி சன்னிதிகளுடன் உள்ளன. இன்று காலை, யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.
நாளை காலை 7:00மணிக்கு, அனைத்து சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊாற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.