/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
/
திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : மார் 25, 2024 06:13 AM

திருத்தணி: திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேம் ஒட்டி கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கடந்த, 22ம் தேதி கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும் மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் அவப்ருத யாகம், மஹா பூர்ணாஹூதி நடந்தது.
காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் விமானம் மற்றும் மூலவர் அம்மன் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்தது.
lகும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லுார் கிராமத்தில் உள்ளது காமாட்சி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில். நேற்று கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழாதுவங்கியது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு நேற்று கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பசுபதீஸ்வரருக்கு மகா அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பவுர்ணமி ருத்ராபிஷேகம்
ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையத்தில் அமைந்துள்ளது பாலகுருநாதீஸ்வரர் கோவில். பழமையான ஆலமரத்தின் அடியில் அமைந்துள்ள இந்த கோவிலில், பிரதோஷம், மகரசங்கராந்தி, சிவராத்திரி, கார்த்திகை தீபஉற்சவம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
பவுர்ணமி தோறும் ருத்ராபிஷேகம் நடத்தப்படுகிறது. பங்குனி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று காலை 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
புனிதநீர் கலசம், வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பகல் 12:00 மணிக்கு, சகஸ்ர தீபலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.

